ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1964ம் ஆண்டு காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானவர் காஞ்சனா. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள காஞ்சனா, கடைசியாக 1985ம் ஆண்டு ஸ்ரீதட்டா தர்மன் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் காஞ்சனா, 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். விஜய் தேவர் கொண்டாஸ் இயக்கும் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் கிராமத்து பாட்டியாக நடிக்கிறார். சினிமாவில் இருந்து ஒதுங்கி சாய்பாபா பக்தராக மாறிய காஞ்சனா, ஆன்மீன வாழ்க்கைக்கு சென்றதால் தொடர்ந்து அவர் நடிக்க மறுத்து வந்தார். தற்போது எப்படியோ அவரை சம்மதிக்க வைத்து நடிக்க அழைத்து வருகிறார்கள்.