'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், நிதேஷ் திவாரி இயக்கத்தில் டங்கல் என்ற படத்தில் நடித்துள்ளார். மல்யுத்த மாவீரர் போகத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் அமீர்கான் இளம் வயது, மூன்று குழந்தைகளுக்கு அப்பா என வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டங்கல் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அமீர்கான் நேற்று பங்கேற்றார். அப்போது அவரிடத்தில் சல்மானின் ‛பிக்பாஸ்' நிகழ்ச்சியில் உங்களின் டங்கல் படத்தை புரொமோஷன் செய்வீர்களா...? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து அமீர் கூறியதாவது... ‛‛சல்மான் பிக்பாஸ் 10 நிகழ்ச்சிக்கு நான் போகவில்லை, ஆனால் என்னுடைய டங்கல் படத்தை அவர் தனது நிகழ்ச்சி மூலம் புரொமோஷன் செய்வார் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
‛டங்கல்' படம் டிசம்பர் 23ம் தேதி ரிலீஸாக உள்ளது.