ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோ. அவர் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வரும் படம் ஓடி ஓடி உழைக்கணும். வாசன் விஷ¨வல் வென்ச்சர்ஸ் சார்பில். எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்கள். கே.எஸ்.மணிகண்டன் இயக்குகிறார். சந்தானம் ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி, மதுசூதனராவ் உள்பட பலர் நடிக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஞானகிரி எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் சண்டை காட்சி சென்னை புறநகரில் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் வில்லனும், சண்டை இயக்குனருமான சில்வாவுடன் இணைந்து சந்தானம் போடும் அதிரடி சண்டைக் காட்சி படமானது. முறைப்படி கராத்தே கற்று பிரவுன் பெல்ட் வாங்கியுள்ள சந்தானம் அதை பயன்படுத்தி சண்டை காட்சியில் நடித்தார். உயரமாக துள்ளி குதிப்பது, சுவற்றில் நடந்து அந்தர் பல்டி அடிப்பது. தலைகீழாக தொங்கியபடி சண்டை போடுவது என மிரட்டியிருக்கிறார்.
"சந்தானத்துக்குள் இப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோ ஒழிந்திருப்பார் என்ற நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் கற்ற கராத்தே அவருக்கும், எங்களுக்கும் எளிதாக காட்சிகளை கம்போஸ் பண்ண உதவியது" என்கிறார் சண்டை இயக்குனர் சில்வா.