ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விகாஸ் பால் இயக்கத்தில், கங்கனா ரணாவத் நடிப்பில், 2014-ம் ஆண்டு வெளியான படம் ‛குயின்'. ஹிந்தியில் சூப்பர் ஹிட்டானதோடு, தேசிய விருது, ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டிலும் சேர்ந்தது. இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருக்கிறார். குயின் தமிழ் ரீ-மேக்கை ரேவதி இயக்குவதாகவும், சுஹாசினி வசனம் எழுதுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கான ஹீரோயின் முடிவாகமல் இருந்தது.
இந்நிலையில் குயின், ஹிந்தி ரீ-மேக்கில் கங்கனா வேடத்தில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக, ‛தர்மதுரை', ‛தேவி' போன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் தமன்னா இந்த ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் அப்படியே குயின் படத்தின் ரீமேக்காக இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களையும் செய்யவிருக்கிறார்களாம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.