ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
தீபாவளி, பொங்கல் ரிலீஸை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் மலையாள திரையுலகத்தினர்.. அந்த நேரத்தில் கேரளாவில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப்படங்களின் போஸ்டர்களே ஆக்கிரமித்து இருக்கும். அதேசமயம் ஓணம் பண்டிகை, கிறிஸ்துமஸ் என்று வரும்போது அவற்றை மற்றவர்களுக்கு விட்டுத்தரவே மாட்டார்கள்.. தங்களது படங்கள் அந்த பண்டிகைகளில் ரிலீசாவதை ஒரு கௌரவமாகவே நினைப்பார்கள்..
அந்தவகையில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக, ஆனால் ஒரு வாரம் முன்னதாக டிச-16ல் வெளியாகிறது.. அன்றைய தினம் சூர்யாவின் 'சி-3'யும் வெளியாவதால் இரண்டுக்கும் கடும்போட்டி இருக்கும் என்கிற சூழல் இருக்கிறது.. இந்தநிலையில் அதற்கடுத்த வாரமே, அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தின் நெருக்கத்தில் (டிச-23) துல்கரின் தந்தை மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படம் வெளியாகிறது..
பிருத்விராஜ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் மம்முட்டியுடன் ஆர்யா, ஷாம், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தந்தை-மகன் போட்டி ஒருபக்கம் இருக்க, மோகன்லால் நடித்துவரும் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படமும் கிறிஸ்துமஸ் ரிலீஸ் தான் என்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தெரிகிறது.. 'புலி முருகன்' வெற்றியால் மோகன்லால் படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதால் தியேட்டர் பங்கீட்டை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.