ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷாரூக்கான் - பராகான் கூட்டணியில் வெளிவந்த வெற்றி படங்களில் ‛மெயின் ஹூன் நா' படமும் ஒன்று. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பராகான் இயக்கப்போவதாக கடந்த சிலதினங்களாக பாலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இதை பராகான் மறுத்துள்ளார். இதுப்பற்றி பராகான் கூறியிருப்பதாவது... ‛‛தற்போது நான் ஒரு படத்திற்கு கதை எழுதி வருகிறேன், ஆனால் அது மெயின் ஹூன் நான் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. சில சமயங்களில் நான் காமெடியாக சொல்லும் விஷயங்கள் மீடியாக்களில் பெரிதாகிவிடுகின்றன. நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எதுவும் உறுதி கிடையாது. தற்போது கதைக்கான வேலைகள் போய் கொண்டு உள்ளது, இந்தக்கதை ஒரு பெரிய ஹீரோவுக்கான கதையாக இருக்கும். ‛மெயின் ஹூன் நா' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வலுவான கதை தேவை, இப்போது என்னிடம் அப்படிப்பட்ட ஒரு கதையில்லை'' என்று கூறியுள்ளார்.