இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். ஏராளமான படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக மிரட்டியவர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். நீல் நிதினுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது, அடுத்தாண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நீல் நிதின், மதுர் பண்டர்கர் இயக்கத்தில் ‛ இந்து சர்கார்' என்ற படத்தில் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே, மதுரின் ஜெயில் படத்தில் நடித்தவர் இந்தப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திராவின் மகனான சஞ்சய்யின் ரோலில் நடிக்க உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த 21 மாத காலம் எமர்ஜென்சி காலக்கட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. அந்தக்காலக்கட்டத்தில் சஞ்சய்யின் அரசியல் பங்கு குறித்த பின்னணயில் இக்கதை உருவாகும் என தெரிகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பும், அதை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பமாக உள்ளது.