ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'ரெமோ' படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த வாரம் 25ம் தேதியன்று ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பு மிகப் பெரும் விளம்பரம் செய்யப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தார்கள். அத்துடன் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு இந்தப் படத்தை வெளியிட்டதால் படத்தைத் திரையிட நல்ல தியேட்டர்களும் கிடைத்தன.
வித்தியாசமனா படங்களையும் முயற்சிகளையும் வரவேற்கும் தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படம் டப்பிங் படமாக இருந்தாலும் சிவகார்த்திகேயனின் பெண் வேட நடிப்பையும், படத்தில் உள்ள 'ரெமோன்ஸ்'ஐயும் நன்றாகவே ரசிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும் தெலுங்கு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் என்பதும் படத்திற்கு பிளஸ் பாயின்டாக அமைந்துவிட்டது. அனிருத்தின் இசையில் பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்தக் காரணங்களால் எதிர்பார்த்த அளவையும் மீறி படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இதனால், வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். ஒரு நேரடிப் படத்தின் அளவிற்கு இந்தப் படமும் அவர்களுக்கு லாபத்தைத் தரும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கான வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு மார்க்கெட்டையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. தெலுங்கு ஹீரோக்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோர் இங்கு நேரடிப் படங்களில் நடிக்க வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ் ஹீரோக்கள் தங்களது டப்பிங் படங்கள் மூலம் அங்கு தடம் பதித்து வருகிறார்கள். இனி, தெலுங்கு நடிகர்கள் தமிழில் நேரடிப் படங்களில் நடிக்க வருவதைப் போல சிவகார்த்திகேயன் போன்ற இளம் தமிழ் நடிகர்களும் நேரடித் தெலுங்குப் படங்களில் நடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
தமிழில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ரெமோ', தெலுங்கில் ஒரு வாரத்திற்குள் 20 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்யலாம் என தெலுங்கு வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.