Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காவ்யா மாதவனுடன் ஹனிமூன் கிளம்பினார் திலீப்..!

27 நவ, 2016 - 14:30 IST
எழுத்தின் அளவு:
dileep-and-kavyamadhavan-to-honeymoon

மலையாள திரையுலகம் மட்டுமின்றி கேரள மக்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஷாக் தரும் விதமாக நேற்று முன்தினம் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்தார் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்.. இது குறித்து திலீப் மற்றும் காவ்யா மாதவன் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என சந்தோஷப்படுகிறார்கள்.. திருமணம் முடிந்த கையோடு காவ்யா மாதவனை அழைத்துக்கொண்டு துபாய்க்கு ஹனிமூன் கிளம்பிவிட்டார் திலீப்..


இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஹனிமூன் ட்ரிப்பில் தனது மகள் மீனாட்சியையும் அழைத்து சென்றுள்ளார் திலீப். மகளையும் அழைத்துக்கொண்டு தந்தை தேனிலவு பயணம் செய்வதை ஒரு காலத்தில் 'டணால்' தங்கவேலு நடித்த 'தேனிலவு' படத்தில் பார்த்து ரசித்திருப்போம். ஆனால் நிஜத்தில் இதை உண்மையாக்கி காட்டிவிட்டார் திலீப்.. அதிலும் திலீப்பின் மகளை உடன் அழைத்துசெல்வதில் காவ்யா மாதவன் தான் அதிக முனைப்பு காட்டினாராம். தனது தாயைவிட, காவ்யா மாதவன் மீது அதிக மதிப்பு வைத்துள்ள மீனாட்சி தான், இவர்களது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in