மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
டைரக்டர் விஷால் பாண்டியா, தற்போது தனது அடுத்த படமான வாஜா தும் ஹோ படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், தான் அடுத்து எடுக்க போகும் படம் மற்றும் அதன் ரிலீஸ் தேதி பற்றிய தகவலை வெளியிட்டார். பேட்டியில் அவர் கூறுகையில், ஹேட் ஸ்டோரி 4 படத்தின் மூலம் 4 வது முறையாக ரசிகர்களை சந்திக்க உள்ளேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இருந்தாலும் சொல்கிறேன். ஹேட்ஸ்டோரி 4 படம் 2017 ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளோம். அடுத்த ஆண்டு இப்படத்தின் சூட்டிங் வேலைகள் துவங்க உள்ளன. இப்படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.