இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
குங்பூ என்ற தற்காப்புக் கலைக்கு, உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ!அமெரிக்கா, கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்; இயற்பெயர், ஜுன்பேன் லீ. இதற்கு, சீன மொழியில், உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர், அமெரிக்காவைச் சேர்ந்த, நர்ஸின் வாயில் நுழையவில்லை; எனவே, புரூஸ் என, செல்லமாக கூப்பிட, அதுவே நிலைத்துவிட்டது.
அவரது குடும்பம், ஹாங்காங் வந்தது. சினிமா துறையில் அடியெடுத்து வைத்தவர், என்டர் த டிராகன், த பிக் பாஸ் உள்ளிட்ட, 20 படங்களுக்கு மேல் நடித்தார். புரூஸ் லீ, மின்னல் வேகத்தில் சண்டையிடுவார்; இவரின் வேகத்துக்கு, சினிமா கேமராக்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக் கலையைத் தோற்றுவித்தவர். கடந்த, 1973 ஜூலை 20ல், இறந்தார்.புரூஸ் லீ, பிறந்த தினம் இன்று!