ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடவுள் இருக்கான் குமாரு படத்தை அடுத்து புரூஸ்லீ, அடங்காதே, 4 ஜி, சர்வம் தாள மயம் போன்ற படங்களில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதில், பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிக்கும் புரூஸ்லீ படத்தில் பத்திரிகை நிருப ராக நடிக்கிறார். டார்லிங் படத்தில் அவருடன் நடித்த மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் காமெடியன்களாக நடித்துள்ளனர். தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள டெல்லி அழகி கிரிட்டி கர்பண்டா நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், அரசியல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ், மன்சூரலிகான் ஆகியோர் அரசியல்வாதிகளாக நடித்துள்ளனர்.அவர்கள் செய்யும் அநியாயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நிருபராக நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் முதன் பாதியில் ஓரளவு காமெடி கலந்த நாயகனாக நடித்தபோதும், பிற்பாதியில் அதிரடி நாயகனாக உருவெடுக்கிறாராம். முக்கியமாக அரசியல்வாதிகளை அட்டாக் பண்ணும் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேசமாக நடித்துள்ளாராம்.