ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். பாலிவுட் நடிகரான இவருக்கு கடந்த மாதம் ருக்மிணி சகாய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி முடிவாகமல் இருந்த நிலையில் இப்போது திருமணம் நடைபெறும் மாதம் வெளியாகியுள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து நீல் நிதின் முகேஷ் கூறியிருப்பதாவது... ‛‛ஒரு கோவிலில் எளிய முறையில் திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் என் பெற்றோர், விமரிசையாக நடத்த வேண்டும் என்கிறார்கள். திருமணம் முடிந்ததும் வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த எண்ணியுள்ளேன். பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.