'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில், ரஜினியின் கபாலி படத்தில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். பாலிவுட்டைப் பொறுத்தவரை கவர்ச்சி நாயகி என்கிற இமேஜ் அவருக்கு இருந்தபோதும், தமிழில் கபாலி இமேஜை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் ராதிகா ஆப்தே, அடுத்தபடியாக கவர்ச்சி அல்லாத வேடங்களை மட்டுமே ஓகே பண்ணி வருகிறார்.
அந்தவகையில், கபாலிக்குப்பிறகு கைவசம் இருந்த இந்தி படங்களில் நடிக்க சென்று விட்டவர், தற்போது சவரக்கத்தி பட டைரக்டர் ஆதித்யா இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். முதல் படத்தில் சலூன் கடைக்காரரின் பிரச்சினையை மையமாக வைத்து கதை பண்ணியவர், அடுத்து பெண்கள் பிரச்சினையை கையில் எடுக்கிறார். அந்த படத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு புரட்சிகரமான பெண்ணாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே.