ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்திக் இயக்கத்தில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தில் பாண்டியராஜன் கேரக்டரையும், 'காவலன்' படத்தில் வடிவேலு கேரக்டரையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். நினைக்கும்போதே சிரிப்பு வரும் இந்த இரண்டு கேரக்டர்களையும் இந்தப்படங்களின் ஒரிஜினலான மலையாளத்தில் சித்திக் இயக்கியபோது, அதில் நடித்தவர் காமெடி நடிகர் ஹரிஸ்ரீ அசோகன். 'கேரளத்து வடிவேல்' என்று கூட இவரை சொல்லலாம். அதுமட்டுமல்ல, மம்முட்டியின் படங்களில் பெரும்பாலும் இவருக்கு வருடம் ஒரு படம் கிடைத்துவிடும் பாக்கியசாலியும் கூட.
ஆனால் இவர் சினிமாவுக்கு நடிக்க வந்தபின் அவ்வப்போது தன் வசதிக்கு ஏற்ப மாருதி, இண்டிகா, இன்னோவா என கார்களை வாங்கினார்.. இப்போது லேட்டஸ்டாக ஒரு பி.எம்.டபிள்யூ காரையும் வாங்கிவிட்டார்.. ஆனால் இதில் என்ன காமெடி என்றால் இவருக்கு இன்றுவரை கார் ஓட்ட தெரியாதாம். ட்ரைவிங் லைசென்ஸ் எடுக்க பயந்துகொண்டு, எப்போதும் ட்ரைவரை ஓட்ட சொல்லிவிட்டு பின் சீட்டில் அமர்ந்துகொண்டுதன் பயணிப்பாராம். இத்தனை வருடம் லைசென்ஸ் இல்லாமல் வாழ்க்கை ஓடிவிட்டது.. இனி வயதான காலத்தில் லைசென்ஸ் எடுத்து என்ன செய்யப்போகிறேன் என்கிறாராம் ஹரிஸ்ரீ அசோகன்
கடந்த வருடம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் இவர் மம்முட்டிக்கு ட்ரைவராக நடித்தார் ஹரிஸ்ரீ அசோகன். ஆனால் இவருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதற்காகவே காட்சியை மாற்றி அமைத்தாராம் இயக்குனர் சித்திக். அதாவது இவர் பெயரளவுக்குத்தான் ட்ரைவர். ஆனால் வண்டியை கழுவி துடைப்பதுதான் இவரது வேலை.. மற்றபடி எங்கே கிளம்பினாலும் மம்முட்டிக்கு பேச்சு துணையாக இவர் பின் சீட்டில் அமர்ந்துகொள்ள, மம்முட்டிதான் எப்போதும் காரை ஓட்டுவதுபோல இவரது கேரக்டரை உருவாக்கி இருந்தார் சித்திக்.