Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வறுமையில் வாடும் சந்திரபோஸ் மனைவிக்கு விஷால் உதவி

26 நவ, 2016 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Vishal-helps-to-Music-director-Chandraboses-wife

பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ். சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தவர். ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். பிறகு 1977ம் ஆண்டு இயக்குநர் வி.சி. குகநாதனின் இயக்கத்தில் வெளியான மதுரகீதம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய "ஏண்டி முத்தம்மா..." என்ற பாடலை மறக்கவே முடியாது.


இவர் இசையமைத்த “மச்சானைப் பார்த்தீங்களா படத்தில் இடம்பெற்ற “மாம்பூவே சிறு மைனாவே பாடல் என்றும் நினைவில் நிற்கும் பாடலாகும். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் “மனிதன், “ஊர்க்காவலன், “ராஜா சின்ன ரோஜா” சத்யராஜ் நடித்த”அண்ணா நகர் முதல் தெரு, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார்.


பிறகு இசையமைக்கும் வாய்ப்பு குறைந்துவிடவே டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையே உறவினர் தயாரித்த திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்தார். அந்த படம் தோல்வி அடைந்தது. இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார். கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி சந்திரபோஸ் இறந்தார். இவருக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ்,வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.


இன்று சந்திரபோஸின் குடும்பம் பத்துக்கு பத்து வீட்டில் மிக வறுமையில் வாடுகிறது. அவரது மனைவி ராஜகுமாரி, வீட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. இதனை கேள்விப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத் பொதுச்செயலாளர் விஷால் சந்திரபோஸ் மனைவி ராஜேஸ்வரியை அழைத்து பேசி தனது தேவி அறக்கட்டளை மூலம் அவருக்கு குடும்ப நல நிதி உதவி வழங்கினார். சந்திரபோஸ் மனைவி கண்ணீர் மல்க விஷாலுக்கு நன்றி தெரிவித்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in