மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் அருந்ததி நாயர். முன்னதாக, பொங்கி எழு மனோகரா என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள இவர், அதையடுத்து விருமாண்டியும் சிவனாண்டியும் என்ற படத்தில் சிங்கிள் நாயகியாக நடித்துள்ளார். அந்த படம் இன்று திரைக்கு வருகிறது. இதையடுத்து டிசம்பர் 1-ந்தேதி சைத்தான் திரைக்கு வருகிறது.
இதில் சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனியின் மனைவியாக நடித்துள்ள அருந்ததி நாயர், மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கியமாக சைக்கோ கணவனிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளில் எதிர்பார்க்காத பர்பாமென்ஸ் கொடுத்துள்ளாராம். அவர் நடித்துள்ள வேடம், சைத்தானுக்குப்பிறகு அருந்ததி நாயரை முன்னணி நடிகையாக்கி விடும் என்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் இளமையான கெட்டப் மட்டுமின்றி, 45, 55 வயது கெட்டப்புகளிலும் நடித்துள்ளாராம் அருந்ததி நாயர். அந்த கதாபாத்திரங்க ளுக்காக அந்த வயது கொண்ட பெண்களின் மேனரிஸத்தை உள்வாங்கி நேச்சுர லாக நடித்துள்ளாராம். அந்த வகையில், சைத்தான் படம் திரைக்கு வரும்போது அருந்ததி நாயர் கோலிவுட்டின் டாப்-10 நடிகை பட்டியலில் நிரந்தர இடம் பிடித்து விடுவார் என்கிறது சைத்தான் டீம்.