ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
நடிகர் விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் நாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து தோல்விகளை தழுவி வந்ததால், உதயநிதி நடித்த கெத்து படத்தில் வில்லனாக உருவெடுத்தார். அதையடுத்து இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்து வரும் கவண் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். கெத்து படத்தை விட இந்த படத்தில் அதிரடியான ரோலில் நடித்துள்ளார் விக்ராந்த்.
ஆனால் இப்படி வில்லனாக நடித்து வரும் அவர் அடுத்தபடியாக சுசீந்திரன், பாண்டிராஜ் உள்பட சில இயக்குனர்களின் படங்களில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் விஷ்ணு விஷால் நடித்ததைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ராந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதலில் நந்திதாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென்று அவரை மாற்றி விட்டார் சுசீந்திரன்.
அவருக்குப்பதிலாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சரண்யா மோகனை அறிமுகம் செய்தது போன்று அவரது சாயலிலேயே ஒரு கேரளத்து நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார். டிசம்பர் 2-ந்தேதி மாவீரன் கிட்டு திரைக்கு வந்ததும் வெண்ணிலா கபடிக்குழு-2 படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.