இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவகார்த்திகேயன் தன் நண்பரான ஆர்.டி.ராஜாவின் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்த 'ரெமோ' படம் கடந்த மாதம் 7-ஆம் தேதி வெளியானது. பாக்யராஜ் கண்ணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்று பெருவாரியானவர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் ரெமோ வெளியானபோது தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் படத்தின் வசூலுக்கு பாதகமில்லை. அதன் காரணமாக இப்படத்திற்கு மக்களின் வரவேற்பு கிடைத்தது.
'ரெமோ' படத்துக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி 50 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்ற படம் 'ரஜினி முருகன்'. அந்த படத்தைப் போலவே இப்போது 'ரெமோ'வும் 50 நாட்களை கடந்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி ஒரு வாரம் ஓடினாலே அது வெற்றிப் படம் என்றாகிவிட்டநிலையில் 'ரெமோ' 50 நாட்களை கடந்திருப்பது 'ரெமோ' குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தன்னுடைய முதல் தயாரிப்பு என்பதால் சென்னையில் ஒன்றிரண்டு காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ரெமோ படத்தை 100 நாட்கள் ஓட்ட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.