பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் தான் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்'.. படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இன்னொரு கதாநாயகியாக 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, முக்கிய வேடத்தில் தமிழ் இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலாவும் நடித்துள்ளார். துல்கர் நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் வருவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இந்தப்படத்துக்காக காத்திருக்கிறார்கள். வரும் டிச-16ஆம் தேதி இந்தப்படத்தை வெளியிட தேதி குறித்துள்ளார்கள்.
அதேநாளில் தான் சூர்யா நடித்துள்ள 'சிங்கம்-3'யும் வெளியாகிறது. இந்தப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்தி செய்ததால் , மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு மும்மடங்காக இருக்கிறது.. பொதுவாகவே கேரளாவில் சூர்யாவுக்கென பலமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அதனாலேயே அவரது படம் ரிலீசாகும்போதேல்லாம் சுமார் 200 தியேட்டர்களுக்கு குறையாமல் தான் ரிலீஸாகின்றன. 'சி-3' படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை, ஆல் கேரளா சூர்யா ஃபேன்ஸ் அன்ட் வெல்பேர் அசோசியேஷன் கைப்பற்றியுள்ளதால் போட்டி பலமாகத்தான் இருக்கும்.. துல்கர் சமாளிப்பாரா..? ஜகா வாங்குவாரா..? பார்க்கலாம்..