தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் | மீண்டும் ஆக்சன் கதையில் ரஜினி |
பிரபல மலையாள இயக்குனர் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் வித்யாபாலன். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். இந்தி, மலையாளம் என இருமொழிப்படமாக உருவாவதாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலும் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வித்யாபாலன்..
இப்போதைய சூழலில் கமலா சுரையாவாக நடிக்க வித்யா பாலனை விட்டால் வேறு ஆள் இல்லைதான்.. ஆனாலும் இந்தக்கதையை உருவாக்கும்போதே இயக்குனர் கமலின் மனதில் இந்த கதாபாத்திரமாக வந்து அவ்வப்போது நிழலாடிய முகம் யார் தெரியுமா..? மறைந்த நடிகை ஸ்ரீவித்யா தான்.. அவரை மனதில் வைத்து தான் இந்தக்கதையை உருவாக்க ஆரம்பித்தாராம் இயக்குனர் கமல்.. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரை காலன் கொண்டுபோய்விட, இப்போது இந்த அரிய வாய்ப்பு வித்யாபாலனுக்கு கிடைத்துள்ளது.