பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுசும், ஜி.வி.பிரகாசும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன? படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்தான். அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக முயற்சி செய்தார். அப்போது ஒரு பேட்டியில் "நானும் தனுஷ் மாதிரி வளர்ந்து காட்டுவேன்" என்றார். இது தனுசுக்கு பிடிக்கவில்லை. இருவரிடையே பிளவு ஏற்பட்டது.
வெற்றி மாறனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அவர் தற்போது இயக்கும் வடசென்னை படத்திற்கும் அவர்தான் இசை அமைப்பாளர் ஆனார், ஆனால் தனுஷ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஜி.வி.பிரகாஷ் விலக்கி வைக்கப்பட்டார். இது இருவருக்கும் இடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்தியது.
ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அவரை தனுஷ் ரசிகர்கள் போட்டு தாக்குகிறார்கள். "தம்பி நீ எப்படி சினிமாவில் நடிப்பாய். சும்மா வந்துட்டு வந்துட்டு போறியே.." "கடவுள் இருக்கான் குமாரு படத்துல நீ வச்சிருக்கிறது ஒட்டு தாடிதானே..." இப்படியாக கலாய்ப்பார்கள். அதில் ஒரு ரசிகர் "தனுசை பிரிந்த பிறகு உனக்கு நேரம் சரியில்லை" என்று டுவிட் செய்ய கோபம் அடைந்த ஜி.வி.பிரகாஷ் "டேய் லூசு தனுசை பரிந்தபிறகுதான் ஹீரோவானேன். சம்பளம் இரண்டு மடங்கா உயர்ந்திச்சு" என்று எழுதினார். இதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் ஜி.பி.பிரகாசுடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கிறார்கள். தனுசை பிரிந்த பிறகுதான் உயர்ந்தேன் என்ற டுவிட்டை டெலிட் செய்து விட்டார் ஜி.வி.பிரகாஷ்.
ஏற்கனவே அஜித் ரசிகர்களை ‛ஆமை' என்று சொல்லி, டுவிட்டரில் அஜித் ரசிகர்களிடம் வசை வாங்கி கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷை, இப்போது தனுஷ் ரசிகர்களும் சேர்ந்து கொண்டு டுவிட்டரில் போதும் போதும் என்ற அளவுக்கு வசை பாடி வருகிறார்கள்.