பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை முடிக்கும் முயற்சியில் இருக்கிறார் கெளதம் மேனன். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் தன்னுடைய யூடியூப் பக்கத்துக்காக ஒரு சீரியலை இயக்க உள்ளார் கௌதம் மேனன். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருக்கிறாராம் கெளதம் மேனன்.
விக்ரம் உடன் கௌதம் மேனன் கூட்டணி போடும் படம் அனேகமாக துருவ நட்சத்திரம் படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. பூஜை போடப்பட்ட பிறகு இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதன் காரணமாக இப்படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில்தான் பல வருடங்களுக்குப் பிறகு துருவ நட்சத்திரம் கதையை கௌதம் மேனன் தூசு தட்ட இருக்கிறார். துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையா? என்று விசாரித்தால், "ஆமாம்.விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.” என்கிறார்கள் கெளதம் மேனனுக்கு நெருக்கமானவர்கள்.
வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் விக்ரம். அந்தப் படத்தில் நடித்த பிறகு, கெளதம் மேனன் படத்தில் நடிக்கிறாரா அல்லது விஜய் சந்தர் படத்தை கேன்சல் பண்ணிவிட்டு இந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறாரா என்பது விரைவில் தெரியும்.