பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருமணத்துக்கு முன்புவரை விஜய், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தார் அமலா பால். இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள தற்போதைய சூழலில் விஐபி 2, வடசென்னை படங்களில் தனுஷ் உடன் நடித்தாலும், பாபிசிம்ஹா, விஷ்ணுவிஷால் போன்ற இரண்டாம்நிலை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிற அமலா பால் தற்போது மேலும் ஒரு புதிய தமிழ் படத்தில் 'கமிட்'டாகியிருக்கிறார்.
'முண்டாசுப்பட்டி' படத்தைத் தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் விஷ்ணுவிஷால் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில்தான் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால். த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஷ்ணு போலீஸாக நடிக்கிறார். 'முண்டாசுப்பட்டி' படத்தில் காமெடியர்களாக நடித்த காளி வெங்கட், ராம்தாஸ் இருவரும் இப்படத்திலும் நடிக்கிறார்கள்.
வில்லன் கதாபாத்திரம் ஒன்றிற்கான புதுமுக நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 29 ஆம் தேதி சென்னையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த டில்லிபாபு என்பவர்இந்தப் படத்தை தயாரிக்கிறார்.