பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நாடுவிட்டு நாடு தாண்டி இங்கிருக்கும் மலையாள ஹீரோக்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இங்கிருந்து வெளிநாடு சென்று வசிக்கும் இந்தியர்களாக, குறிப்பாக மலையாள ரசிகர்களாகவே இருப்பார்கள்.. ஆனால் ரஷ்ய பெண் ஒருவர் மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் தீவிர ரசிகையாக இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா.? ஆனால் உண்மைதான். துல்கர் சல்மான் இதுவரை நடித்த படங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட்ட இந்த ரசிகையின் பெயர் மரினா கிளாட்கிக்.
ஒருமுறை ஏதேச்சையாக துல்கர் சல்மான் நடித்த ஏபிசிடி படத்தை பார்க்க நேர்ந்ததாம். துல்கரின் கலையான முகமும் துறுதுறு நடிப்பும் வசீகர குரலும் இவரை கவர்ந்துவிட, துல்கர் அதற்குமுன் நடித்த படங்களை தேடிப்பிடித்து பார்த்ததுடன், துல்கர் படம் அடுத்து எப்போது ரிலீசானாலும் முதல் நாளே பார்த்துவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல தனது பேஸ்புக் வாயிலாக துல்கரின் அருமை பெருமைகளை எடுத்துச்சொல்லி, தனது நட்பு வட்டாரத்தில் இருபவர்களையும் துல்கர் நடித்த படங்கள பார்க்கும்படி சிபாரிசும் செய்கிறாராம்.