அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை பற்றிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சஞ்சய் தத்தின் ஆஸ்தான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இதில், சஞ்சய் தத்தாக, ரன்பீர் கபூர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், ஹீரேயினாக சோனம் கபூர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
இதுப்பற்றி பாலிவுட்டில் விசாரித்த போது... படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்க இருப்பதாகவும், 1990-களில் இருந்த சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் கடந்து சென்ற பாலிவுட் நடிகைகள் சிலரில் ஒருவரது ரோலில் சோனம் கபூர் நடிக்க இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் இப்படத்தில் அனுஷ்கா சர்மா பத்திரிக்கையாளராக, முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சஞ்சய் தத்தின் வாழ்க்கைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்கயிருப்பதாக கூறப்படுகிறது.