'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் இர்பான் கானும் ஒருவர். தற்போது அவர் ‛ஹிந்தி மீடியம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சாகத் சவுத்ரி இயக்குகிறார், தினேஷ் விஜன், பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் சபா ஓமர் என்ற பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும் நடிக்கிறார். படத்தில் இர்பான்கான், டில்லியில் சாந்தினி சவுக் பகுதியில் வாழும் நடுத்தர குடும்பத்து கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் அவர், மனைவியின் சொல்லுக்கு கீழ்படிந்து நடக்கும் கணவராக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‛ஹிந்தி மீடியம்' படம் அடுத்தாண்டு, மார்ச் 31-ம் தேதி ரிலீஸாக உள்ளது.