Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தியில் அசத்தும் இளையராஜாவின் ரி-க்ரியேஷன் பாடல்

24 நவ, 2016 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Ilayarajas-recreation-song-made-success-in-Dear-Zindagi-movie

இளையராஜாவின் இசை இந்தக் காலத்திற்குப் பொருத்தமாக இருக்காது என சில ஞான சூன்யங்கள் சொல்லிக் கொண்டு திரிகின்றன. இளையராஜாவின் இசை உணர்வோடு கலந்த ஒரு இசை, திரையில் நாம் பார்க்கும் கதாபாத்திரங்களை அப்படியே நமக்குள்ளும் கலக்கும்படியான ஒரு இசை என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.


ஷாரூக்கான, ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் 'டியர் ஜிந்தகி' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை இயக்கிய கௌரி ஷிண்டே இயக்கியிருக்கும் படம் இது. இந்தப் படத்தில் ஷாரூக்குக்கும், ஆலியாவிற்கும் இடையில் என்ன இருக்கிறது என்பதை இளையராஜாவின் இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடலை ரி-க்ரியேஷன் செய்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இரண்டு நாட்களிலேயே இந்த வீடியோவை 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.


கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிக்க பாலுமகேந்திரா இயக்கிய 'சத்மா' படத்தில் , இளையராஜா இசையமைப்பில் சுரேஷ் வட்கர் பாடிய 'ஏ ஜிந்தகி...' பாடலைத்தான் ரி-க்ரியேஷன் செய்து 'டியர் ஜிந்தகி' படத்தின் வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். தமிழில் ரஜினிகாந்த், மாதவி நடிக்க இளையராஜா இசையமைத்து வெளிவந்த 'என் வாழ்விலே வரும் அன்பே வா...' பாடலைத்தான் 'சத்மா' படத்தின் 'ஏ ஜிந்தகி'யாக இசையமைத்திருந்தார் இளையராஜா. 1983ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அந்தப் பாடல் இன்று வரை ஹிந்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த ஒரு பாடல்.


அந்தப் பாடலின் இனிமைக்குள், ஷாரூக்கும், ஆலியாவும் வெளிப்படுத்திக் கொள்ளும் அந்தக் காதல் மொழி இப்போது இளம் ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்திழுத்துள்ளது என்பதற்கு 30 லட்சம் பேர் இரண்டு நாட்களில் ரசித்ததுதான் ஒரு சாட்சி.


பாடல் வீடியோவைக் காண... https://youtu.be/xQx5H14YTyQ


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in