இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பட்ஜெட் படங்களை கைப்பற்றுவதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சஞ்சிதா ஷெட்டி, நந்திதா, சிருஷ்டி டான்கே போன்ற நடிகைகளுக்கிடையே திரைக்குப்பின்னால் பெரிய அக்கப்போரே நடந்து கொண்டிருக்கிறது. தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்தாவது படங்களை கைப்பற்றும் முயற்சிகள் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் சஞ்சிதா ஷெட்டியைப்பொறுத்தவரை இப்போதைக்கு சம்பளத்தை விட நல்ல கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுத்து வருகிறார்.
மேலும், தற்போது அவர் பரத்துடன் என்னோடு விளையாடு மற்றும் எங்கிட்ட மோதாதே, ரம், ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ரம் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் துப்பாக்கியை கையில் வைத்தபடி சஞ்சிதா ஷெட்டி போஸ் கொடுப்பதைப்பார்த்து அவரது ஆக்சன் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி சஞ்சிதாவைக்கேட்டால், ரம் படத்தில் நான் ஆக்சன் ரோலில் நடிக்கவில்லை. ஆனால் இதுவரை நடிக்காத கேரக்டர். அதேபோல் என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே படங்களிலும் என்னை புதிய கெட்டப்பில் ரசிகர்கள் பார்க்கலாம். அந்த வகையில், இந்த படங்கள் என்னை சராசரி நடிகையாக இல்லாமல் மாறுபட்ட நடிகையாக வெளிப்படுத்தும் என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.