'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் நடிகையாக வந்து பின்னர் ஆரோகனம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி போன்ற படங்களையும் இயக்கினார். சின்னத்திரையில் சொல்வ தெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமாகி விட்ட அவர், சிலபல கிண்டல்களையும் சந்தித்தார். அதோடு தன்னை கிண்டல் செய்தவர் களுக்கு தனது டுவிட்டர், பேஸ்புக் மூலம் பதிலடியும் அவ்வப்போது கொடுத்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் திரைக்கு வந்த ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் அவரது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டல் செய்து காட்சி வைத்திருந்தனர். அதனால் அதற்கு தனது சமூகவலை தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு சவால் விடும் வகையில் சில தகவல்களையும் வெளியிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ஆனால், தான் எதிர்ப்பு தெரிவித்தபோதும் தன்னை கலாய்ப்பது தொடர்ந்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தற்போது கூறியுள்ள அவர், சோசியல் மீடியாவை விட்டு இன்று முதல் வெளியேறுவதாக நேற்று அறிவித்துள்ளார். அதோடு, தன்னை அவமானப்படுத்திய, காயப்படுத்திய அனைவருக்குமே அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் லட்சுமிராமகிருஷ்ணனின் இந்த முடிவிற்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.