இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கவலையில் இருக்கிறார். இவரது அடுத்த படமான ரயீஸ், விரைவில் வெளியாகவுள்ளது. இதில், பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை மகீரா கான் தான், ஹீரோயின். பாகிஸ்தானில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு.தற்போது, பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்,நடிகையர் நடிக்கும் படங்களை திரையிட,ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த படத்துக்கு சிக்கல் வருமோ என, கலக்கத்தில் இருக்கிறார் ஷாரூக், மகீரா கானுக்கு, பாலிவுட்டில் இது தான் முதல் படம்.'இந்த பெண்ணை வைத்து, முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்தாகி விட்டது; இப்போது, இதுபோன்ற பிரச்னை வருகிறதே என்ன செய்வது' என, ஷாரூக் கானுடன் சேர்ந்து, அவரது மனைவி கவுரி கானும், கையை பிசைந்து கொண்டிருக்கிறார்; ஏனெனில், இந்த படத்தின் தயாரிப்பாளர் அவர் தான்.