டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் காஜல் அகர்வால். சில ஆண்டுகளுக்கு முன், 'இளம் ஹீரோக்களுடன் மட்டும் தான் ஜோடி போடுவேன்' என, கூறிவந்த அவர், இப்போது, தனக்கு வயதாகி விட்டதை மனதில் வைத்து, தன் கொள்கையை தளர்த்தியுள்ளார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மறு பிரவேசம் செய்யும், கைதி நம்பர் 150 திரைப்படத்தில் மேடம் தான் ஹீரோயின். தற்போது, சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினருடன், ஐரோப்பாவில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் காஜல். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கவலை வேண்டாம் படத்தில், வசனம் எல்லாம் எக்குத் தப்பாக இருக்கிறதே' என, கேட்டால்,'வசனம், கதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது; அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன்; அவ்வளவு தான்' என்கிறாராம் காஜல்.