ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோயின் சாயிஷா செகல். சில வாரங்களுக்கு முன் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான அஜய் தேவகன் இயக்கிய ‛சிவாய் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ஓமங்குமாரின் இயக்கத்தில் ‛பூமி படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அப்பா - மகள் இடையேயான பாசம், கோபம், சண்டை போன்றவற்றை சொல்லுகிற படமாக பூமி உருவாக உள்ளது. இதில் சாயிஷா, சஞ்சய்யின் மகளாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சாயிஷாவின் ரோல் மிகவும் சுவாரஸ்யமானது என்று கூறப்படுகிறது. அதனால் இப்படம் பற்றியும், சஞ்சய்க்கு மகளாக நடிப்பது பற்றியும் இயக்குநர், சாயிஷாவிடம் பேசியுள்ளார். அவரும் தன் ரோலின் தன்மையை உணர்ந்து சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.