ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
'இருமுகன்' கமர்ஷியலாக வெற்றியடைந்ததும் உற்சாகமாக அமெரிக்கா கிளம்பிச் சென்றார் விக்ரம். அங்கிருந்தபடி தன்னுடைய அடுத்தப்படங்கள் குறித்த திட்டமிடலையும் வகுத்திருக்கிறார் விக்ரம். இருமுகன் படத்தைத் தொடர்ந்து 'டோன்ட் ப்ரீத்' ஹாலிவுட் படத்தின் தமிழ் ரைட்ஸை வாங்கி அதன் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார் விக்ரம். அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் சிம்புவை வைத்து 'வாலு' படத்தை இயக்கிய விஜய சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
விக்ரம் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் பற்றிய விவரம் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விக்ரமுக்கு ஜோடியாக 'பிரேமம்' மலர் டீச்சர் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். முக்கிய வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் கதைக்களம் வடசென்னையாம். எனவே, இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வடசென்னையில் படமாக்கப்பட உள்ளது. டிசம்பர் இறுதியில் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்குமாம்.