Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறகடித்து சுற்றும் காதல் பறவைகள்

23 நவ, 2016 - 14:03 IST
எழுத்தின் அளவு:
love-grown-to-the-core-for-samantha-and-nagachaitanya

நாக சைதன்யா - சமந்தா ஆகிய இருவர்தான் இப்போதைக்கு இளம் காதல் ஜோடிகளாக தென்னிந்தியத் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா காதல் ஜோடிகளைப் போலவும் அவர்களும் முதலில் தங்களது காதலை வழக்கம் போல மறுத்தார்கள். இருந்தாலும் இருவரும் அடிக்கடி விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அதன்பின் நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா, மகனின் காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னார்.


இருவரது பெற்றோர்களும் காதலுக்கு நாக சைதன்யா, சமந்தா பச்சைக் கொடி காட்ட காதல் ஜோடிகள் பல இடங்களில் ஒன்றாக செல்ல ஆரம்பித்தார்கள். தற்போது அவர்கள் ஜோடியாக இருக்கும் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவின் படம் வெளியாகும் போதெல்லாம் சமந்தா உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார். 'பிரேமம், சாகசம் சுவாசகா சாகிப்போ' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவந்து நாக சைதன்யாவின் மார்க்கெட் தெலுங்கில் உயரவும் காரணமாக அமைந்தது.


இன்று நாக சைதன்யாவின் பிறந்த நாள். அவருக்கு தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும், தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சமந்தா இன்னும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நாக சைதன்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஒரு வேளை நேரிலேயே வாழ்த்து தெரிவித்திருப்பாரோ.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in