Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6.1 உயரம் கொண்ட அக்காளுக்கு சான்ஸ் கேட்கும் நிக்கி கல்ராணி!

23 நவ, 2016 - 08:47 IST
எழுத்தின் அளவு:
nikki-galrani--is-in-search-of-chance-for-her-sister-sanjana-galrani

டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்த நிக்கி கல்ராணி, அந்த முதல் படமே ஹிட்ட டித்ததால் அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி தற்போது முன்னணி நடிகை பட்டியலில் சேரும் தருவாயில் உள்ளார். அவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதோடு, ஆரம்பத்தில் சில கண்டிசன்களை போட்டு நடித்தவர், இப்போது அவற்றை தளர்த்தி விட்டதோடு சம்பள விசயத்திலும் அடக்கி வாசிப்பதால் தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகையாகியிருக்கிறார்.


மேலும், நிக்கி கல்ராணியைப்போன்று அவரது அக்காள் சஞ்சனா கல்ராணியும் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பரவலாக நடித்து வருகிறார். தமிழில், ஒரு காதல் செய்வீர் -என்ற படத்தில்தான் பல வருடங்களுக்கு முன்பு அவர் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு இங்கு வாய்ப்பில்லாமல் கன்னடத் துக்கு சென்று விட்டார். இந்நிலையில், இப்போது மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் சஞ்சனா. அதனால் தனக்கு தெரிந்த அபிமானிகளிடம் அக்காளுக்காக நேரடி சிபாரிசினை முடுக்கி விட்டுள்ளார் நிக்கி கல்ராணி.


ஆனால், சஞ்சனா கல்ராணியின் உயரம் 6.1 ஆக இருப்பதால், அவரது உயரமே புதிய வாய்ப்புகளுக்கு தடையாகி வருகிறதாம். நிக்கி கல்ராணி சான்ஸ் கேட்கும் இடங்களில், படத்தில் நடிக்கும் ஹீரோக்களை விட சஞ்சனா உயரமாக இருக்கிறாரே என்ற காரணத்தைதான் சொல்கிறார்களாம். அதனால், இதுவரை தமிழிலும் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சஞ்சனா கல்ராணி, தற்போது ஆக்சன் கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராகி விட்டாராம். அதனால் இதுவரை அக்காளுக்கும் தன்னைப்போலவே கதாநாயகி சான்ஸ் கேட்டு வந்த நிக்கி கல்ராணி, இப்போது வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க சான்ஸ் கேட்டு வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in