ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கருணாஸ் நாயகனாக நடித்த படம் அம்பாசமுத்திரம் அம்பாணி. இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் சங்கர். அந்த படத்தில் மனசை தொடும் ஒரு கேரக்டரில் நடித்த சங்கர், அதன்பிறகு பட்டத்து யானை உள்பட பல படங்களில் காமெடியன், குணசித்ர வேடங்கள் என நடித்துள்ளார். இந்நிலையில், அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பட்டதாரி என்ற படமம் வருகிற 25-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்ப்பதாக சொல்கிறார் அம்பாணி சங்கர்.
அதுகுறித்து அவர் கூறுகையில், பட்டதாரி படத்தில் மொத்தம் 5 பேர் லீடு கேரக்டர்கள் உள்ளன. அதில் நானும் ஒரு காமெடி கலந்த குணசித்ர வேடத்தில் நடித்திருக்கிறேன். அதனால் கண்டிப்பாக எனது நடிப்பு ரசிகர்களை போய் சேரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த பட்டதாரி படத்திற்கு பிறகு எந்தமாதிரியான வேடங்களுக்கும் சங்கர் பொருந்துவார் என்று டைரக்டர்கள் புரிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறேன் என்று கூறும் சங்கர், இதுவரை சங்கர் என்ற பெயரிலேயே நடித்த வந்த நான், இனிமேல் அம்பாணி சங்கர் என்ற பெயரிலேயே நடிப்பேன். காரணம், கருணாசுடன் நான் நடித்த அம்பாசமுத்திரம் அம்பாணி படம்தான் என்னை ரசிகர் களுக்கு அடையாளம் காட்டியது. அதனால் என்னை அடையாளம் காட்டிய அந்த டைட்டீலில் இடம்பெற்ற அம்பாசமுத்திரம் என்ற ஊர் பெயரை நீக்கி விட்டு அம்பாணி என்பதை எனது பெயருடன் சேர்த்துக்கொண்டுள்ளேன் என்கிறார் அம்பாணி சங்கர்.