இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருப்பவர் ஷாரூக் கான். தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கிய இயக்கத்தில் ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ரயீஸ்.‛ரயீஸ்படம் கள்ளச் சாராயம் விற்பவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஷாரூக், கள்ளச் சாராயம் விற்கும் தாதாவாக நடித்து வருகிறார். மஹிரா கான் மற்றும் நவாசுதின் சித்திக் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கி வெளிவர இருக்கும் ‛டியர் ஜிந்தகி' படத்தில் ஷாரூக்கான், ஆலியா பட் உடன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்ற ஷாரூக்கிடம், ‛ரயீஸ்' படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து ஷாரூக் கூறியதாவது....." ‛ரயீஸ்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் டிசம்பரில் வெளியாகும் என்று நம்புகிறேன். இப்படத்தின் டிரைலர் தயாராக இருக்கிறது, டிரைலரின் எடிட்டிங் மற்றும் சென்சார் வேலைகள் எல்லாம் நிறைவடைந்துள்ளது. ‛ரயீஸ்' டிரைலருக்கான புரொமோஷனில் படக்குழு பிஸியாக இருக்கிறது. அதனால் டிரைலர் விரைவில் வெளியாகும்" என்றார்.