ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எஸ்.எம்.எஸ்.மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய்மகேந்திரன், இணைந்து தயாரித்து வரும் புதிய படம் 'சைவ கோமாளி'. இது ஒரு காமெடி திரில்லர் படம்.
இந்தப்படத்தை சுரேஷ் சீதாராம் இயக்குகிறார். ரஞ்சித், வனிதா, சூப்பர்குட் லட்சுமணன், கிரேன் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, டி.கே.கலா, காயத்ரி, வனிதா, நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கே.பாலா ஓளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் சுரேஷ் சீதாராம் கூறியதாவது:
ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு சைகோவும் இருக்கான் ஒரு கோமாளியும் இருக்கான், அவன் எப்படி தன்னை வெளிப்படுத்துவான் என்பது இந்தச் சமூகம் அவனை எதிர்கொள்கின்ற முறையில் தான் இருக்கிறது என்ற கருத்தையும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளையும், அதை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வையும் இந்தப்படத்திற்கான திரைக்கதையாக அமைத்திருக்கிறோம்.
108 ஆம்புலன்ஸின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கும் 'ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு இறங்கு' என்ற பாடல் காட்சியை ஈ.சி.ஆர். ரோடு, பல்லாவரம், பம்மல், கீழுர், மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் குத்துப்பாட்டாக படமாக்கியிருக்கிறோம். இது பேசப்படுவதாக இருக்கும் என்றார்.