தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கெளதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் காக்க காக்க. அந்த படத்தில் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதில் சூர்யாவின் நடிப்பு குறித்து பலரும் பெருமையான சொன்னதை அடுத்து, ஒருநாள் தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டு பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று அந்த படத்தை பார்த்துள்ளார் ரஜினி. அதில் சூர்யாவின் தோற்றம், டயலாக் டெலிவரி என அனைத்தும் ஐபிஎஸ் அதிகாரிக்கே உரிய வகையில் கச்சிதமாக இருந்ததைக்கண்டு அசந்து விட்டாராம்.
இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரஜினி, இதுவரை ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா அளவுக்கு யாருமே நடித்ததில்லை என்று கூறியிருப்பவர்,நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகமானபோது அவருக்கு நடிப்பு, டான்ஸ் எதுவுமே தெரியாது. ஆனால் அதன்பிறகு அவர் தன்னை இந்த அளவுக்கு வளர்த்துக்கொண்டு ஒரு சிறந்த நடிகராக வலம் வருகிறார் என்பது பாராட்ட வேண்டிய விசயம் என்று சூர்யாவைப்பற்றி கூறியுள்ளார் ரஜினி.