சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடத்தி வந்த டைரக்டர் சிவா, பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போட்டு அதற்குள் படப்பிடிப்பு நடத்தினார். அதையடுத்து இப்போது மறுபடியும் பல்கேரியா நாடு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தில் வசன காட்சிகளை படமாக்கும்போதே அவ்வப் போது பைட் சீன்களையும் படமாக்கி வரும் டைரக்டர் சிவா, முதல் சண்டை காட்சியை சில்வா, இரண்டாவது காட்சியை கணேஷ் போன்ற பைட் மாஸ்டர்களை வைத்து படமாக்கியவர், அடுத்தபடியாக கிளைமாக்ஸ் சண்டை காட்சியை படமாக்க உள்ளார். பல்கேரியா நாட்டில் நடைபெறும் இந்த சண்டை காட்சியில் அஜித்துக்கு பயிற்சி கொடுக்க ஹாலிவுட் பைட் மாஸ்டர் ஷிவே என்பவர் வருகிறாராம். அந்த காட்சி இதுவரை அஜித் படங்களில் இல்லாத அளவுக்கு அதிரடி காட்சியாக படமாக்கப்பட உள்ளதாம்.