'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
'கிடாரி' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்து வரும் படம் 'பலே வெள்ளையத் தேவா'. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சோலை பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் சங்கிலி முருகனும், கோவை சரளாவும் நடித்துள்ளனர். காமெடிப் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கோவைசரளாவுக்கு சசிகுமாரின் பாட்டி வேடம்.
கிடாரி படத்துக்கு இசையமைத்த 'டர்புகா' சிவாவே இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கடந்த சில வாரங்களாக தேனியில் பரபரப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 10 ஆம் தேதி அன்று முடிவடைந்தது. படப்பிடிப்புக்கு இடையிலேயே எடிட்டிங்கும் முடிவடைந்ததால் தற்போது படத்தின் டப்பிங் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக முடிவடைந்தால் பலே வெள்யைத்ததேவா படத்தை டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சசிகுமார். அதேநாளில்தான் 'போகன்' படமும் வெளியாகவிருக்கிறது.
சசிகுமார் திட்டமிட்டபடி 'பலே வெள்ளையத் தேவா' டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் பட்சத்தில், இந்த வருடத்தில் சசிகுமாரின் நடிப்பில் வெளிவரும் 5வது படமாக இந்தப்படம் இருக்கும். இந்த வருடத்தில் சசிகுமார் நடிப்பில் ஏற்கெனவே பாலா இயக்கிய தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, சமுத்திரகனியின் அப்பா (கெஸ்ட் ரோல்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் பலே வெள்ளயத்தேவா சேருமா பார்ப்போம்.