Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ரெமோ' - தெலுங்கில் நவம்பர் 25ல் ரிலீஸ்

21 நவ, 2016 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Remo---telugu-releasing-on-Nov-25

பாக்கியராஜ் கண்ணன் இயக்க அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'ரெமோ' திரைப்படம் தமிழில் கடந்த மாதம் 7ம் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. 'கபாலி, தெறி' படங்களக்குப் பிறகு இந்த ஆண்டின் வசூல் படமாக இந்தப் படம் அமைந்தது என்று சொல்லப்பட்டது. சுமார் 60 கோடி ரூபாய் வரை இப்படம் வசூலித்திருக்கலாம் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தியத் திரையுலகின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணி புரிந்திருப்பதாலும், எந்த மொழிக்கும் பொருத்தமான கதை என்பதாலும் இந்தப் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, நவம்பர் 25ம் தேதி இப்படம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியாகிறது. பிரபல தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரான தில் ராஜு, தமிழில் படத்தைத் தயாரித்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடுகிறார்.


சிவகார்த்திகேயன் நடித்த எந்த ஒரு தமிழ்ப் படமும் இதுவரை தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானதில்லை. 'ரெமோ' படம்தான் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படம். இப்படத்தின் முதல் பார்வை வெளியீடு, இசை வெளியீடு ஆகியவற்றை ஏற்கெனவே ஹைதராபாத்தில் நடத்தி படத்தை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார்கள்.


பவன் கல்யாண் அடுத்து நடிக்கப் போகும் படத்திற்கு 'ரெமோ' படத்திற்கு இசையமைத்த அனிருத் இசையமைக்கப் போவதும், அந்தப் படத்தின் நாயகியாக 'ரெமோ' நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதும் 'ரெமோ' படத்திற்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது.


சுமார் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in