பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மோதிரக்கையால் குட்டுப்பட்டு திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா நாயர். பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய 'லிவிங் டுகெதர்' படத்தில் அறிமுகமான ஷிவதா நாயர், அடுத்து தமிழில் நடித்த 'நெடுஞ்சாலை' படம் மூலம் பாப்புலரானர். மலையாள நடிகரான முரளி கிருஷ்ணன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டவர், அப்படியே மற்ற நடிகைகளை போல் நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவாரோ என பார்த்தால், முன்னைவிட நடிப்பில் தீவிரம் காட்டிவருகிறார்.. கடந்தவருடம் ஜெயசூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'சு சு சுதி வால்மீகம்' படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
தற்போது தமிழில் வல்லவனுக்கு வல்லவன், அதேகண்கள், கட்டம் என மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ஷிவதா மலையாளத்தில் 'லட்சியம்' என்கிற படத்தில் நடித்துவருகிறார்.. அதை தொடர்ந்து, தற்போது ஜெயராம் நடிக்கும் 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக மாறியுள்ளார். அனேகமாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பிரயாகா மார்ட்டின் கேரக்டரைத்தான் இவருக்கு ஒதுக்கியுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜெயராமை வைத்து இந்த வருட ஆரம்பத்தில் 'ஆடுபுலியாட்டம்' என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.