தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித்துடன் இணைந்து 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் பேபி அனிகா. அடுத்தடுத்து தமிழில் மிருதன், நானும் ரவுடி தான் படங்களில் நடித்த அணிகாவுக்கு தம்ழை விட மலையாளத்தில் தான் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.. குறிப்பாக மம்முட்டி-நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நயன்தாராவின் மகளாக துறுதுறு பெண்ணாக நடித்தவருக்கு இப்போது மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது..
இந்தப்படத்தில் மம்முட்டி-சினேகா தம்பதியின் மகளாக சாரா டேவிட் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் பேபி அனிகா. யாவருக்கு எந்த அளவுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்றால், சமீபத்தில் இந்தப்படத்தில் மம்முட்டி, ஆர்யா ஆகியோருக்காக பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டதுபோல பேபி அனிகாவுக்கும் ஒரு பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு அசத்தியுள்ளார்கள். பாவுட்டியுடே நமதில், பாஸ்கர் தி ராஸ்கல் படங்களை தொடர்ந்து மம்முட்டியுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கிறார் பேபி அனிகா.