ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம் தங்கல். அமீர்கான் நடிக்கும் இந்தப் படத்தை நிதீஷ் திவாரி இயக்கி உள்ளார். டிஷ்னி வோர்ல்ட் சினிமாவுடன் இணைந்து அமீர்கான் தயாரித்துள்ளார். பியூஷ்குப்தா, ஸ்ரேயாஸ் ஜெயின், நிகில் மஹோத்ரா நடித்துள்ளனர். பிரித்தம் சக்ரபோர்த்தி இசை அமைத்துள்ளார், சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் பிரபல குத்துச்சண்டை வீரர் மகாவீர் சிங் போகத் வாழ்க்கை வரலாற்றை தழுவியது. அவர் தன் இரு மகள்களான கீதா போகத், பபிதா குமாரி ஆகியோரை எப்படி குத்துச் சண்டையில் பெரிய வீராங்கனையாக உருவாக்குகிறார் என்பது கதை. ஆமீர்கான் 50 வயதை தாண்டியராவக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் உலக நாடுகளிலும், யு டிவி மோசன் பிக்சர்ஸ் இந்தியாவிலும் வெளியிடுகிறது. தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறது. தமிழ் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. முன்னணி நடிகர் ஒருவர் அமீர்கானுக்கு குரல் கொடுக்க இருக்கிறார். டிசம்பர் 23ந் தேதி படம் வெளிவருகிறது. தோனி படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பையொட்டி இந்தப் படமும் தமிழில் வெளிவருகிறது. ஆமீர்கானின் பிகே படம் தமிழில் நல்ல வரவேற்புடன் ஓடியதும் குறிப்பிடத்தக்கது.