நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
சென்னையில் செயல்பட்டு வரும் வானவில் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் பாரதியார் பிறந்த தினவிழாவை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் எழுத்து துறையில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாரதியார் விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பாரதியார் விருது முதுபெரும் நடன கலைஞரும், நடிகையுமான வைஜயந்திமலாவுக்கு வழங்கப்படுகிறது. பாரதியார் பிறந்த தினமான டிசம்பர் 11ந் தேதி நடக்கும் விழாவில் பாடலாசியர் வைரமுத்து இந்த விருதை வழங்குகிறார்.
பாரதியார் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் வானவில் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ளது. திருவல்லிக்கேனியில் உள்ள என்.கே.டி தேசிய மேல்நிலை பள்ளியில் டிசம்பர் 10 மற்றும் 11ந் தேதிகளில் விழா நடக்கிறது. இதன் இயக்குனர் கே.ரவி, பார்லிமென்ட் உறுப்பினர் இல.கணேசன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.