ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
2.0 படத்தின் முதல் பார்வை இன்று மாலை மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோவான சல்மான் கானும் வந்தார்.
2.0 படத்தின் முதல் பார்வையில் ரஜினிகாந்தும், அக்ஷய் குமாரும் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது. “இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல” என்ற ஆங்கில வாசகத்துடன் '3Diwali2017' என்ற 2017ம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என்ற அறிவிப்புடன் அந்த போஸ்டர் இருக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், '2.0 படத்தின் ஹீரோ நானில்லை, அக்ஷய்குமார்தான் ஹீரோ,” எனப் பேசியது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
'எந்திரன்' படத்தில் கூட நாயகன் ரஜினியை விட வில்லன் 'சிட்டி' ரஜினியைத்தான் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2.0 முதல் பார்வைக்கு 'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி உட்பட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.