இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் கெளதமி. ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமான இவர், பின்னர் கமல், விஜயகாந்த் என அந்த காலகட்டத்தில் நடித்து வந்த அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பெரிய ரவுண்டு வந்தார். குறிப்பாக, ராமராஜனுடன்தான் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தார் கெளதமி. சில ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு, கணவரை விவாகரத்து செய்து விட்டு கமலுடன் 13 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த கெளதமி, தற்போது அவரை விட்டும் பிரிந்து விட்டார்.
இந்நிலையில், தனது மகள் சுப்புலட்சுமியை சினிமாவில் ஹீரோயினியாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் கெளதமி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களிடம் சான்ஸ் கேட்டுள்ளார். அவர் எடுத்த அந்த முயற்சி காரணமாக, தற்போது தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினி நடிக்கும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் சுப்புலட்சுமி நடிப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர வேறு சில படங்களிலும் மகளை நடிக்க வைப்பதற்காக தீவிரமாக கதை கேட்டு வருகிறார் கெளதமி.