பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் சற்றே நெகட்டிவ்வான கேரக்டரில் நடித்தார் த்ரிஷா. அவரது கேரியரிலும் அது வித்தியாசமான கேரக்டராக அமைந்தது மட்டுமல்ல, அதில் நடித்த த்ரிஷாவுக்கு நல்லபெயரையும் வாங்கிக்கொடுத்தது. கொடி படத்தை அடுத்து 'சதுரங்கவேட்டை-2', 'கர்ஜனை' முதலான படங்களில் நடிக்கிறார்.
இவற்றில் 'சதுரங்கவேட்டை-2' படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா! த்ரிஷாவின் மற்றொரு படமான 'கர்ஜனை' ஹிந்தியில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'NH10' படத்தின் ரீ-மேக். இந்தப் படத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் அமித் பார்கவ் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாகத்தான் த்ரிஷா நடிக்கிறார். ரோட் மூவியான இந்தப்படத்திற்கான லொகேஷன் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இந்த படங்களுக்கு முன்னதாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தமான படம் மோகினி. மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து முடித்துள்ள 'மோகினி' படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.